"திவியட சவியக்" திட்டத்தினூடாக இரத்தினபுரிக்கு 74 மில்லியன் ரூபா நிதி

සංගණනයේ සංගණනයේ
සංගණනයේ සංගණනයේ

"வளமான நாடு - அழகான வாழ்வு" தேசியக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "திவியட சவியක්" (வாழ்வுக்கு ஒரு பலம்) வீடமைப்புத் திட்டத்திற்காக இரத்தினபுரி மாவட்டத்திற்கு 74 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பெண்கள் மற்றும் சிறுவர் உப குழுவின் தலைவியுமான சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே தெரிவித்துள்ளார்.பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 27 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவிகளை வழங்கும் முகமாக இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"திவியட சவியක්" வீடமைப்புத் திட்டமானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் விசேட ஆபத்து நிலையில் உள்ள மக்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும், சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை சேவைகள் திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்தும் ஒரு விசேட திட்டமாகும்.

வாழ்வதற்குப் பொருத்தமான சரியான வீடற்ற, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட, ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வாழும் சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீட்டு உரிமையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, நிறுவன ரீதியான பராமரிப்பில் இருந்து சமூகமயப்படுத்தப்பட்ட, சமூகமயப்படுவதற்கு வீடற்ற நிறுவனப் பராமரிப்புச் சிறுவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற, ஆபத்தான நிலையில் உள்ள சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு வசதிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் ஒரு பயனாளி குடும்பத்திற்கு 02 மில்லியன் ரூபா (ரூ. 2,000,000/-) நிதியுதவி வழங்கப்படும் என்பதுடன், அது தலா 05 இலட்சம் ரூபா வீதம் நான்கு தவணைகளாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக்க சேனாரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், இரத்தினபுரி மேலதிக மாவட்டச் செயலாளர் கயானி ஐ. கருணாரத்ன, மாகாண நன்னடத்தை ஆணையாளர் ஆர்.எம்.சீ.எல். ரத்னாயக்க உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பயனாளி குடும்பங்களின் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்டச் செயலகம் / அரசாங்க தகவல் திணைக்களம்,
இரத்தினபுரி.

செய்தி மற்றும் நிகழ்வுகள்