செய்தி மற்றும் நிகழ்வுகள்
Meeting & GA Programme
அரசு சேவை மையங்கள்
தொடர்புடைய இணைப்புகள்
உள்ளக விவகார பிரிவு(IAU)
உள்ளக விவகார பிரிவு (IAU)
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கான உள் விவகாரப் பிரிவு!
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இணைந்து தொடங்கியுள்ள "அனைத்து பொது நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவுவதற்கான புதிய நடைமுறைக்கு" இணங்க, தற்போது எமது அமைச்சிற்குள் ஒரு உள் விவகாரப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி, எமது அமைச்சிற்குள் ஏதேனும் முரண்பாடுகள், ஊழல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் அறிந்தால், பின்வரும் முறையைப் பயன்படுத்தி எமது அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள உள் விவகாரப் பிரிவுக்கு, பெயர் குறிப்பிடாமல் அல்லது தங்கள் அடையாளத்துடன் தகவல் அல்லது முறையீடுகளை பின்வருமாறு முறையிடலாம்.
அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள முறைப்பாட்டுப் பெட்டிக்கு தகவல்/முறையீடுகளை அனுப்புதல்
அஞ்சல் வழியான நெறிப்படுத்தல்களுக்கு
“உள் விவகாரப் பிரிவு",
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, கொழும்பு 01
* மின்னஞ்சல் மூலம் அறிவித்தல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* தொலைபேசி இலக்கங்கள் மூலம் அறிவித்தல் 011-2484524 / 011-2484525
* பிரிவுக்கு வட்சப் வழிமுறை மூலம் தெரியப்படுத்துதல் 077 9973081
* QR குறியீடு ஊடாக அறிவித்தல்
மேலும் எமது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் உள் விவகார பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதால் அவற்றின் பெயர்களாவன:
> இலங்கை சுங்கம்
> இலங்கை கலால் திணைக்களம்
> உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
> அரசு மதிப்பீட்டுத் துறை
> தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்
> ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம்
இந்த நிறுவனங்கள் தொடர்பான முறையீடுகளை அந்தந்த உள் விவகாரப் பிரிவுகளுக்கு அனுப்பும் வாய்ப்பு இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் அற்ற நேர்மையான பொது சேவையை வழங்குவதே எங்கள் குறிக்கோள்!












